Thursday, 31 March 2011

யாருக்கு வாக்களிக்க வேண்டும்?


 திராவிட முன்னேற்ற  கழகத்திற்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்காக சோ ராமசாமி போன்ற அறிவு ஜீவிகளும் ஆனந்த விகடன் போன்ற அவா ஊடகங்களும் சீமான் போன்ற ஈழப்போராளிகளும் முன்  வைக்கும் காரணங்கள் இவைதான்.

ஸ்பெக்ட் ரம் முறை கேடுகள்
கலைஞரின் குடும்பம்
விலைவாசி உயர்வு
ஈழப் பிரச்சனை

ஸ்பெக்ட்ரம் முறை கேடுகள் தொடர்பாக ஆ.ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.உச்ச நீதி மன்றம், நாடாளுமன்ற கூட்டு குழு போன்ற உயர் அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோருக்கு கூட சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். தவறு செய்திருந்தால் நிச்சயமாக தண்டிக்கப்படப்போகிறார்கள். குற்றம் சுமத்தப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிட மாட்டார்.

ராசா கைது செயப்பட்டதாலேயே திமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது என்பது என்ன நியாயம்?ஜெயலலிதா மீது சுமத்தப்படாத குற்றங்களா? சிறைக்கு அனுப்பப்படவில்லையா?அத்தனையயும் சரியான நிருபணம் இல்லை யென்பதால் கடந்து வந்துவிட்டார்ராசாவும் அது மாதிரி வரமாட்டாரா? ஜெயலலிதா மீது இன்னமும் கூட ஒரு வழக்கு பாக்கி இருக்கிறது. அவருக்கு மட்டும் வாக்களிக்கலாமா?ஸ்டெர்லைட் கம்பெனியிடம் ரூபாய் ஆயிரம் கோடி பெற்று கொண்டுதான் தான் ஓரம் கட்டப் பட்டுவிட்டதாக வைகோ யாரை குற்றம் சாட்டுகிறார்? அவர்களுக்கு மட்டும் வாக்களிக்கலாமா?

கலைஞரின் குடும்ப படத்தை வெளியிட்டு, "ஆக்டோபஸ்" என்று                     அநாகரீகமாக வருணிக்கிறது ஆனந்த விகடன்.ஏறத்தாழ  90 வயதை நெருங்கும் ஒருவருக்கு உறவுகள் அதிகமாக இருக்காதா? இதில் என்ன அதிசயம்? மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், பேத்திகள், இருப்பது இயல்புதானே?தந்தையின் வழியில் அவரது வாரிசுகளும் வருவது இந்த நாட்டில் இதுவரை இல்லாத ஒன்றா?டாக்டர்கள், வழக்கறி ஞர்கள், நடிகர்கள்,பாடகர்கள் என்று அனைத்து துறையிலும் வாரிசுகள் வரத்தானே செய்கிறார்கள்?கலைஞரின் குடும்ப வாரிசுகள் மட்டும் அரசியலுக்கு வரக் கூடாதா? சசிகலா குடும்பம் மட்டும் சிறிய குடும்பமா? அதனை படம் பிடித்து போடுகின்ற தைரியம் ஆனந்த விகடனுக்கு உண்டா? கலைஞரின் கொள்ளு பேரன்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் அமைச்சர்கள் என்று கிண்டலடிக்கிறது ஆனந்த விகடன். . அம்மாவின் ஹெலிகாப்டரை வானத்திலே பார்த்தவுடன் கீழே விழுந்து வண்ங்கிய அமைச்சர்களை பற்றி நாடே கைகொட்டி சிரித்ததே, அது ஆனந்த விகடனுக்கு தெரியாதா?கட்சியின் எல்லப் பொறுப்புகளும் கலைஞரின் குடும்பத்திற்கே கொடுக்கப்படுகிறதாம். ஆனந்த விகடனுக்கு இப்படி ஒரு கவலை. ஏன் வேறு யாருக்காவது கொடுத்தால் இவர்கள் எல்லொரும் திமுகவிற்கு வந்துவிடுவார்களா? தனது கட்சியில் யாருக்கு பொறுப்பு அளிக்கப்படவேண்டும் என்பது அந்த கட்சியின் தலைவரின் உரிமை. அதை ஏற்பதோ எதிர்ப்பதோ அந்த கட்சியின்  தொண்டர்களின் உரிமை. இடையில் இவர்கள் ஏன் கவலைப் படுகிறர்கள்?அம்மா கட்சியில் மட்டும் சீனியாரிடி பார்த்தா பதவி வழங்கப்படுகிறது?சசிகலா கைகாட்டுபவர்களுக்குதான் பதவிகள் என்று  பேசப்படுகிறதே? ஆனந்தவிகடனுக்கு தெரியாதா என்ன?

விலைவாசி பிரச்சனை ஏதோ தமிழகத்தின் பிரச்சனை என்பதுபோல் பேசப்படுகிறதே. விலைவாசி உயர்வு  இந்தியாவின் ஒட்டு மொத்த  பிரச்சனை இல்லையா? மேற்கு வங்கத்தில் மட்டும் விலை வாசி மிக குறைந்து உள்ளதா?ஏதோ அம்மா ஆட்சிக்கு வந்துவிட்டால், அரை அணாவிற்கு இட்லியும்  ஐம்பது காசுக்கு தோசையும் கிடைக்கும் என்பது போல் பிரச்சாரம் செய்யப்படுகிறதே, இது நியாயமா?இது வடிகட்டிய முட்டாள்தனம் என்று மக்கள் அறிய மாட்டார்களா?

ஈழப் பிரச்சனைக்காக ஜெயலலிதாவை ஆதரிப்பவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.விடுதலை புலிகளுக்கு எதிரானவர் என்று தன்னை பிரகடன படுத்தி அதனால் தன் உயிருக்கு கடுமையான ஆபத்து இருக்கிறது என்று தெரிவித்து பூனை படை பாதுகாவல் பெற்றவர் அவர். ஏதோ அம்மா ஆட்சிக்கு வந்த்து விட்டால் கலைஞரை கைது செய்ததது போல ராஜபக்சேயயும் கைது  செய்து சிறையில் அடைத்து தமிழ் ஈழம் மலர செய்வார் என்று சீமான் சொல்வார், நாமெல்லாம் நம்பவேண்டும்!
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? இது ஆருடம் அல்ல. அனுபவம்
1) கலைஞர் கஜானாவை காலியாக்கிவிட்டர். தமிழகம் நிதி நெருக்கடியில் இருக்கிறது, அதனால் அவரால் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள் நிறுத்தப் படுகிறது என்று அறிவிக்கப்படும்
2)அரசு ஊழியருக்கான அகவிலைப்படி மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தப்படும்.
3)பேருந்து கட்டணம் உயர்த்தப்படும்.
4) நஷ்டத்தில் இயங்குவதாக கூறி பேருந்து கழங்கள் தனியார் மயமாக்கப்படும்
5)திரைபடத்துறை கேளிக்கை வரி மீண்டும் அமுல் படுத்தப்படும்
6)நிதி நெருக்கடியை காரணம் காட்டி சாலை பாலங்கள் பணிகள் நிறுத்தப்படும்.
7) தேர்தல் நேரத்தில் தனக்கு குடைச்சல் கொடுத்த வைகோ மற்றும் விஜயகாந்த் போன்றவர்கள் ஏதோ காரணம் சொல்லி கைது செய்யப்படுவார்கள்.
8) ஸ்டாலின், அழகிரி ஆகியோர் கைது செய்யப்படுவார்கள்.
9)கொட நாட்டில் தனக்கு எதிராக குரல் எழுப்பிய மக்கள் தண்டிக்கப்படுவார்கள்.
10) இறுதியாக ஒரு அறிக்கையில், தான் பதவி ஏற்ற போது தமிழகம் 5000 ஆம் கோடி ரூபாய் நிதி பற்றாக் குறையில் இருந்தது. ஆனால் இப்பொழுது 15000 கோடி ரூபாய் உபரியாக உள்ளது என்பார்.

இதைத் தவிர மக்களுக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.இப்படி பழி வாங்கும் நோக்குடனும், உணர்ச்சி வயபடக் கூடியவருமான  சர்வாதிகாரிஒருவருக்கும், பொது இடத்தில் கூட மரியாதையை கடை பிடிக்காமல் தன் சொந்த வேட்பாளரையே அடிக்கும் அவரது கூட்டணித் தலைவருக்குமா நாம் வாக்களிக்க வேண்டும்?
எனவே  ஜனநாயகத்தை காப்பாற்ற கலைஞருக்கே வாக்களிப்போம்!~









2 comments:

  1. எனக்கு வாக்கில்லை, நான் அங்கு வாழ்பவனும் இல்லை. ஆனால் தமிழக அரசியலில் ஆர்வமுள்ளவன்.
    எனக்கு இராமனாண்டாலும், இராவணனாண்டாலும் ஒன்றே!
    ஆனாலும் கலைஞர் குடும்பத்தில் பேராசைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
    90 வயதை நெருங்கும் ஓர் முதியவர் ,தன் குடும்பமொன்றையே சிந்திப்பது செயலாற்றுவது, சகிக்க முடியவில்லை.
    தன் மரியாதை எல்லாவற்றையும் தொலைத்து விட்டார்.
    இவர்கள் இப்படியே தொடர்வது நாட்டுக்கு பெரிய ஆபத்து.
    அதனால் அதிமுகவும் கள்ளக் கூட்டமாகவிருப்பினும் , வேறு மாற்று எவருமில்லாத நிலையில் , திமுக விடம் இருந்து
    அரசு மாறுவதே எல்லோருக்கும் நன்று.

    புதுக் கள்ளன் மெதுவாகத் தொடங்குவான்.
    ஆனால் என்ன? கலைஞர் மொத்தக் குடும்பத்துக்கும்
    சிக்கலே!
    ஐயோ கொல்லுறாங்க தான்....
    இதனால் நிச்சயம் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ளதே! எந்த மாற்றமுமில்லை.
    மீண்டும் கூறுகிறேன். நீங்கள் அதிமுகவில் வைக்கும்
    அத்தனை குற்றங்களையும் திமுகவும் செய்கிறது,
    நிறைய விரிவாக எழுதலாம் நேரமில்லை.
    யார் வந்தும் மக்கள் நிலை மாறப்போவதில்லை.
    கலைஞர் குடியோ, மன்னார்க் குடியோ தான் வாழப்போகிறது.

    ReplyDelete
  2. ஊழல் யார் வந்தாலும் நடக்கும், குறையாது !

    குடும்ப அரசியல், இந்தியாவின் தலை வலி இந்தியா முழுதும் தொடரும். ராகுல் பிரதமர்- எண்ணிப் பாருங்கள்.

    ஏழைகளுக்கு உணவு,உடை,உறைவிடம்,மருத்துவம்,கல்வி தொடர தி மு க கூட்டணி.

    சர்வாதிகாரம், திடீர் வேலை நீக்கம், எடுத்தேன் கவிழ்த்தேன் ஆட்சி வேண்டுமா அ தி மு க.

    ReplyDelete